
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் – ஆர்யா இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. ‘எனிமி’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், மிருணாளினி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
இந்தப் படத்தில் விஷாலுக்கு நாயகியாக மிருணாளினி நடித்து வருகிறார்.
தற்போது ஆர்யாவுக்கு நாயகியாக மம்தா மோகன்தாஸ் ஒப்பந்தமாகியுள்ளார்.
‘எனிமி’ படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வினோத் தயாரித்து வருகிறார். இசையமைப்பாளராக தமன், ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், கலை இயக்குநராக டி.ராமலிங்கம் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
[youtube-feed feed=1]