கொல்கத்தா
வரும் 2024 ஆம் வருடம் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க மாநிலக் கட்சிகளுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.
நேற்று திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் அமைப்பு தேர்தல் நட்ந்தது. கொல்கத்தாவில் நடந்த இந்த தேர்தல் சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு நடந்துள்ளது.. இந்த தேர்தலில் கட்சி நிறுவனரும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி அக்கட்சியின் தலைவராகப் போட்டியின்றி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.
மம்தா தனது உரையில்.
“வரும் மக்களவை தேர்தலில் பாஜவை எதிர்க்கும் கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் வரவேண்டும். காங்கிரஸ் பாஜவை எதிர்க்காமல் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறது. எனவே காங்கிரசின் ஆணவத்தால் ஏற்பட்ட தோல்விக்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது.
நான் தனி ஆளாக நின்றாவது பாஜவை எதிர்ப்பேன். எங்கள் நோக்கம் பாஜ.வை தோற்கடிக்க வேண்டும் என்பதாகும். 2024 மக்களவை தேர்தலில் அனைத்து மாநிலக் கட்சிகளும் ஓர் அணியில் நின்று பாஜவை வீழ்த்த வேண்டும். என நான் அழைப்பு விடுக்கிறேன்.
மத்திய நிதிநிலை அறிக்கையில் மக்களை ஏமாற்ற பல்வேறு பொய்யான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு பேர் நாட்டின் எதிர்காலத்தோடு விளையாடுகின்றனர்.நமது நாட்டு மக்கள் வேலை, உணவு ஆகியவைதான் வேண்டும் என்கின்றனர், ஆனால் பாஜக வைர நகைகள் விலையைக் குறைக்கிறது.
இந்தியாவின் விருதுகளான பத்மபூஷண் விருது வழங்குவதும் அரசியலாக்கப்பட்டுள்ளது. மீறி நாம் பாஜ.வுக்கு எதிராகப் பேசினால் நம்மை மிரட்டுவார்கள்,அத்துடன் பெகாசஸ் செயலியைப் பயன்படுத்தி செல்போன்களை ஒட்டுக் கேட்பார்கள்”
எனக் கூறி உள்ளார்.