கொல்கத்தா:
இந்த தேர்தலில் பிரதமர் மோடிக்கு ரசக்குல்லாதான் கிடைக்கும் என்று மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி கடுமையாக சாடினார்.
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் அறிவித்துள்ளபடி 7 கட்டங்களிலும் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏற்கனவே சில தொகுதி களில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், 3வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு வரும் 23ந்தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலம் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பாலுர்காட் பாராளுமன்ற தொகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி, பிரதமர் மோடி இந்த தேர்தலில் பா.ஜ.க. அதிகப்படியான இடங்களை கைப்பற்றும் என பகல் கனவு கண்டுகொண்டிருக்கிறார். ஆனால் அவருக்கு ரசகுல்லா தான் கிடைக்கும் என்று சாடினார்.
நடைபெற்று வரும் தேர்தலில், பா.ஜ.க.வுக்கு ஒட்டுமொத்தமாக 100 இடங்களுக்கு மேல் கிடைக்காது என்று கூறியவர், தென்மாநிலங்களான ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு ஒரு தொகுதிகூட கிடைக்காது என்றும் கூறினார்.