கொல்கத்தா: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாள் விழாவில், பிரதமர் மோடியுடன் கலந்துகொண்ட விழாவில், ஜெய்ஸ்ரீராம் கோஷம் எழுப்பப்பட்டதற்காக, பேச மறுத்து புறக்கணித்தார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

கொல்கத்தாவிலுள்ள விக்டோரியா மெமோரியல் கட்டடத்தில், நேதாஜியின் 125வது பிறந்தநாளை ஒட்டி, ஒரு கண்காட்சி நிகழ்வு நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துகொண்டார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

ஆனால், இந்த நிகழ்வின்போது, கூட்டத்தில் ஒரு பகுதியினர் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷம் எழுப்பினர். இச்செயல் மம்தாவை கோபமடையச் செய்தது. இதனால், அந்த முக்கியமான நிகழ்வில் அவர் பேசுவதற்கு மறுத்துவிட்டார்.

“இது கட்சி நிகழ்ச்சியல்ல; மாறாக, அரசு நிகழ்ச்சி. எனவே, இங்கே கண்ணியம் காப்பாற்றப்படுவது முக்கியம். இத்தகைய அவமதிப்பை ஒருபோதும் ஏற்க முடியாது” என்று ஆவேசமாக பதிலளித்தார் மம்தா பானர்ஜி.