கொரோனா உச்சத்தில் இருந்த போது மலையாள உச்சநட்சத்திரமான மம்முட்டி, வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தார்.
பல மாதங்களுக்கு பிறகு அவரை அண்மையில் மலையாள தயாரிப்பாளர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது.
இந்த கல்யாண வரவேற்புக்கு மோகன்லாலும் வந்திருந்தார். இருவரும் கருப்பு உடையுடன் காட்சி தரும் புகைப்படம் வைரலானது.
இந்த நிலையில் மம்முட்டியின் இரண்டு புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
ஒரு போட்டோவில் ஜடாமுடி- நீண்ட தாடியுடன் கறுப்பு ‘டெனிம்’ சட்டை அணிந்து மந்தகாச புன்னகையுடன் மம்முட்டி காட்சி தருகிறார். இன்னொன்று- மனைவியுடன் இருக்கும் போட்டோவாகும்.
அமல் நீரட் இயக்கும் ‘பிலால்’ என்ற புதிய படத்துக்காக மம்முட்டி தாடியும், முடியும் வளர்ப்பதாக செய்திகள் பரவி வரும் நிலையில், மம்முட்டி- அமல் இருவரும் புதிய படத்தில் இணைய இருப்பது உண்மைதான் என நடிகர் சவுபின் ஷாகிர், தெரிவித்துள்ளார்.
மம்முட்டி நடித்துள்ள ஒன், பிரிஸ்ட், நியூயார்க் ஆகிய மூன்று படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன என்பது கூடுதல் தகவல்.
– பா. பாரதி