கோழிக்கோட்டைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மம்மிக்கா இவருக்கு வயது 60.

கேரளாவின் வீதிகளில் லுங்கி சட்டையுடன் அன்றாடம் நடந்து செல்லும் கூலித் தொழிலாளியான மம்மிக்காவைக் கண்ட ஒருவர் அவரது அனுமதியுடன் அவரை புகைப்படம் எடுத்து தனது ஸ்டூடியோ-வில் வைத்திருந்தார்.

ஆறு மாதம் கழித்து மேலும் சில புகைப்படங்களை அவர் எடுக்க இந்தப் புகைப்படத்தைப் பார்த்த பிரபல புகைப்படக் கலைஞரான ஷரீக் வாலயில் விளம்பர மாடலாக நடிக்க இவரை அணுகினார்.

விளம்பர மாடலாக நானா ? என்று ஆச்சரியத்தில் கேட்ட இவரிடம், உங்களுக்குத் தேவையான உடை மற்றும் சிகையலங்காரத்தை நான் செய்துகொள்கிறேன் நடிப்பீர்களா ? என்று கேட்டதற்கு சரி என்று ஒப்புக் கொண்டார்.

https://www.instagram.com/p/CZrbiLIBp4O/

பின்பு, தனது துணிக்கடைக்கான விளம்பரத்திற்காக கோட் சூட் உள்ளிட்ட ஆடைகளை அணிவித்து தோற்றத்தையே மாற்றினார் ஷரீக் வாலயில், இவரை வைத்து எடுத்த புதிய படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர அது இப்போது கேரளா மட்டுமன்றி இந்தியா மற்றும் அரபு நாடுகளிலும் வைரலாகி வருகிறது.

கூலித் தொழிலாளியான மம்மிக்கா 60 வயதில் விளம்பர மாடலாக வலம் வர துவங்கியுள்ள நிலையில், அவருக்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புகள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறது மல்லுவுட் வட்டாரம்.