பெங்களூரு

போக்குவரத்து நெரிசலால் பெங்களூரு  சட்டசபை வளாகத்துக்கு நடந்து செல்ல நேரிட்டதால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கோபம் அடைந்துள்ளார்.

நேற்றூ பெங்களூருவில் உள்ள கர்நாடக சட்டசபை அமைந்துள்ள விதான் சௌதாவில் முதல்வராக குமாரசாமி பதவி ஏற்றார்.   அவருடன் துணை முதல்வராக பரமேஸ்வரா பதவி ஏற்றார்.    இந்த விழாவில் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.    அழைப்பை ஏற்று நாடெங்கும் உள்ள பல எதிர்க்கட்சித் தலைவர்களும் மாநில முதல்வர்களும் விழாவில் கலந்துக் கொண்டனர்.

விழாவில் பங்கு கொள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டுள்ளார்.  கர்நாடக சட்டசபையான விதான் சௌதாவுக்கு அவர் சிறிது தூரம் நடந்து வர நேர்ந்துள்ளது.   இதனால் மம்தா கோபம் அடைந்துள்ளார்..   விழா மண்டபத்தில் நுழைந்ததும் கர்நாடக காவல்துறை இயக்குநரிடம் இதை தெரிவித்துள்ளார்.  அத்துடன் தேவே கௌடா, சரத்பவார் மற்றும் குமாரசாமியிடமும் இதை கூறி வருத்தம் அடைந்துள்ளார்.

[youtube https://www.youtube.com/watch?v=SYokjKPUFyI]

சற்று நேரம் கோபமான முகத்துடன் காணப்பட்ட மம்தா பானர்ஜியை சமாதானம் செய்த்ள்ளனர்.   சிறிது நேரத்தில் இயல்பான முகத்துக்கு திரும்பிய மம்தா மேடையில் உள்ளவர்களுடன் சகஜமாக பேச தொடங்கியது அனைவருக்கும் மகிழ்ச்சியை உண்டாக்கியது.

[youtube-feed feed=1]