கொல்கத்தா

த்திய அரசு 100 நாள் வேலைத் திட்ட நிதியை முடக்கி வைத்துள்ளதால் டில்லிக்கு படையெடுக்க உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கூறியுள்ளார்.

திருணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்கு வங்காள மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி, தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

மம்தா பானர்ஜி தனது பதிவில்,

”மேற்கு வங்காளம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் எனப்படும் 100 நாள் வேலைத்திட்டத்தை செயல்படுத்துவதில் சிறப்பாகச் செயல்படுவதாகப் பெயர் எடுத்துள்ளது. ஆயினும், அந்த திட்டத்துக்காக மேற்கு வங்காளத்துக்குக் கொடுக்க வேண்டிய நிதியைப் பொறாமை மற்றும் பழிவாங்கும் அரசியலுக்காக மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக ரூ.6 ஆயிரத்து 907 கோடி நிதியை முடக்கி வைத்துள்ளது.  மேலும் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்துக்கான நிதியும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காள மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டு நிதிப் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதை மக்கள் நீண்ட காலத்துக்கு சகித்துக் கொள்ள மாட்டார்கள். நாங்கள் மக்களின் உரிமைக்காகப் போராட நாங்கள் உறுதி பூண்டு டில்லியுடன் நேருக்குநேர் மோதத் தயாராகி விட்டோம்.

நாங்கள் இந்த போராட்டத்தை டில்லிக்கு எடுத்துச் செல்வோம். டில்லிக்குப் பாதிக்கப்பட்ட மக்கள் எழுதிய கடிதங்களுடன் படையெடுத்துச் செல்வோம். டில்லியில் உள்ள தலைவர்களின் காதுகளை மக்களின் குரல் எட்டுவதை உறுதி செய்வோம். மத்திய அரசுக்கு அடிபணிய மாட்டோம். மத்திய அரசின் பழிவாங்கும் அரசியல் முடிவுக்கு வர வேண்டும். நாம் மேற்கு வங்காளத்துக்காகவும், அதன் மக்களுக்காகவும் உறுதியுடன் நின்று நீதி கிடைக்கும்வரை ஓய மாட்டோம்”

என்று தெரிவித்துள்ளார்.