டில்லி

பாஜகவுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளையும் ஓரணியில் திரட்டும் முயற்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று இரவு சோனியா கந்திய அவர் இல்லத்தில் சந்தித்தார்.

நாடு முழுவதும் தொடர் வெற்றி பெறும் பாஜக வுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளையும் இணைக்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முயன்று வருகிறார்.    அதையொட்டி தொடர்ந்து பல அரசியல் கட்சித் தலைவர்களை அவர் சந்தித்து வருகிறார்.   கடந்த மூன்று நாட்களாக டில்லியில் சரத் பவார், மற்றும் சிவசேனா, தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டிர சமிதி, ராஷ்டிரிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம், ஜார்கண்ட் முக்தி மோர்ச்ச உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்களையும் மம்தா  சந்தித்துள்ளார்.

நேற்று இரவு டில்லியில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்துக்கு சென்ற மம்தா பானர்ஜி அவருடன் 20 நிமிடம் பேசி உள்ளார்.   பாஜகவுக்கு எதிராக தாம் அமைக்க உள்ள கூட்டணியில் காங்கிரஸை இணைக்க வேண்டும் என அவர் சோனியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.   அவருடைய கோரிக்கையை பரிசீலிப்பதாக சோனியா தெரிவித்துளார்.

பாஜகவின் அதிருப்தி தலைவர்களான யஷ்வந்த் சின்ஹா மற்றும் சத்ருகன் சின்ஹாவை சந்தித்து பேசிய மம்தா பானர்ஜி பாஜகவின் முன்னாள் அமைச்சர் அருண் ஷோரியையும் சந்தித்துள்ளார்.     மோடிக்கு எதிராக மம்தா எடுத்து வரும் முயற்சிகளுக்கு யஷ்வந்த் மற்றும் சத்ருகன் சின்ஹா பாராட்டு தெரிவித்துள்ளனர்.