புத்தக ’ராயல்டி’யை நிவாரணமாக வழங்கிய மம்தா..
கொரோனா தாக்குதலை கட்டுப்படுத்த மத்திய –மாநில அரசுகள் நிதி திரட்டி வருகின்றன.
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தாராளமாக அள்ளி வழங்குகிறார்கள். அந்த பணம், அவர்கள் தொகுதி வளர்ச்சிக்காக அரசுகள் ஒதுக்கிய பணம் என்பது இங்கே கவனிக்கத்தக்க ஒன்று.
மே.வங்கத்தில் முதல் –அமைச்சர் மம்தா ‘முதல்-அமைச்சர் அவசர கால நிவாரண நிதி’ என்ற பெயரில் நிதி திரட்டி வருகிறார்.
அந்த நிதிக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கிய மம்தா, ’பிரதமரின் தேசிய நிவாரண நிதி’ க்கும். 5 லட்சம் அளித்துள்ளார்.
செய்தி என்ன வென்றால்-
இது –
அவரது வங்கி சேமிப்பு பணம்.
மம்தா பானர்ஜி 100 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். சர்வதேச புத்தகக் கண்காட்சியில் அவரது புத்தகங்களுக்குத் தனி கிராக்கி உண்டு.
ஏராளமான கவிதைகளும் தீட்டியுள்ளார், மம்தா.
புத்தகம் மற்றும் கவிதை எழுதியதன் மூலம் அவருக்கு ’’ராயல்டி’’யாக வந்த பணத்தை வங்கியில் டெபாசிட் செய்துள்ளார்.
அந்த பணத்தில் இருந்தே ,10 லட்சம் ரூபாய் நிவாரணத்தை அவர் கொடுத்துள்ளார்.
இதனைத் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள மம்தா ‘’ முதல்-அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. என்ற முறையில் எனக்கு வழங்கப்படும் ஊதியத்தை நான் இதுவரை எடுக்க வில்லை. நான் 7 முறை எம்.பி.யாக இருந்துள்ளேன். அதற்காகத் தரப்படும் ஓய்வு ஊதியத்தையும் மறந்து விட்டேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
– ஏழுமலை வெங்கடேசன்