காரக்பூர்

ஃபானிபுயல் ஒரிசாவை கடந்து மேற்கு வங்கத்தை தாக்க உள்ளதால் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தனது இரண்டு நாள் தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு, புயல் தாக்க உள்ள பகுதியில் முகாமிட்டு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உள்ளார்.

ஃபானி புயல் கரை கடந்து வருவதால் ஒரிசாவில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.   அத்துடன் இந்த புயலால் மேற்கு வங்க மாநிலமும் கடும் பாதிப்பு அடையும் என கூறப்படுகிறது.    இரு மாநிலங்களிலும் புயல் காரனமாக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

மேற்கு வஙக மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடலோர பகுதியான காரக்பூரில் இன்றும் நாளையும் தங்கி புயல் நிலையை நேரில் பார்வையிட திட்டமிட்டுள்ளார்.   தற்போது தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வரும் மம்தா பானர்ஜி தனது தேர்தல் பயணஙக்ளை இரு நாட்களுக்கு ரத்து செய்துள்ளார்.

இது குறித்து மம்தா பானர்ஜி, “நான் புயல் சீற்றம் காரணமாக பேரிடர் ஏற்படலாம் எந்தால் இன்னும் இரு தினங்களுக்கு எனது தேர்தல் பேரணிகளை ரத்து செய்துள்ளேன்.    நாங்கள் தொடர்ந்து நிலைமையை ஆராய்ந்து வருகிறோம்.    புயல் நிலையை அறிய நானும் அதே பகுதியில் தங்கி நேரில் ஆய்வு செய்ய உள்ளேன்.

மக்கள அனைவரும் மீட்பு பணியினருடன் ஒத்துழைக்க வேண்டுகிறேன்.   அத்துடன் இன்னும் இரு தினங்களுக்கு எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் மக்கள் இருக்க வேண்டும் எனவும் வேண்டிக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.