கறுப்பு பண பதுக்கலை தடுக்கும் முயற்சி என்ற பெயரில் 500, 100 நோடுக்களை செல்லாததாக அறிவித்திருக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு முதன் முதலில் கருத்துச் சொன்ன அரசியல் தலைவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. இதை “மோடியின் இதயமற்ற நடவடிக்கை” என்று வர்ணித்திருக்கிறார்.

mamata

பிரதமர் மோடி வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப்பணத்தை வெளியெ கொண்டு வரப்போவதாக சொல்லி அதை செய்ய முடியாமல் போனதால் தனது தோல்வியை மறைக்க போட்ட நாடகம்தான் இந்த நடவடிக்கை. இதனால் சாதாரண மக்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள். அன்றாடக் கூலி வேலை செய்துவிட்டு அதில் கிடைத்த 500 ரூபாய் பணத்தை வாங்கி வந்த நமது எளிய சகோதர சகோதரிகள் நாளைய உணவுக்கு என்ன செய்வார்கள் என்ற கேள்விக்கு பிரதமரிடமிருந்து நான் பதிலை எதிர்பார்க்கிறேன்.
ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பொய்ப் பெயரில் ஏழை எளிய மக்கள் மீது பாய்ந்திருக்கும் இதயமற்ற நடவடிக்கை இது. இந்த நடவடிக்கையை எடுக்கும் முன் எவ்வளவு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை அரசும் அரசு சார்ந்த வங்கிகளும் செய்திருக்கின்றன? இப்போது போதுமான அளவு 100 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் இல்லை. அப்படியிருக்க ஏழை எளிய மக்கள், உழைக்கும் வர்க்கத்தினர், சாதாரண பணியிலிருக்கும் மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை எப்படி வாங்குவார்கள் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.