கொல்கத்தா:
டார்ஜிலிங் மக்களவை தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், கோர்கா ஜன்முக்தி மோர்ச்சாவும் பொதுவான வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளன.
கடந்த 2014 மக்களவை தேர்தலில் கோர்கா ஜன்முக்தி மோர்ச்சாவுடன் கூட்டணி அமைத்து டார்ஜிலிங் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றது.
இம்முறை பாஜக கூட்டணியிலிருந்து விலகி, இம்முறை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கோர்கா ஜன்முக்தி மோர்ச்சா கூட்டணி வைத்துள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜியை நேரில் சந்தித்த கோர்கா ஜன்முக்தி மோர்ச்சா தலைவர் பினாய் தமாங், இரு கட்சிகளும் பொது வேட்பாளரை நிறுத்துவது என முடிவு செய்தனர்.
அவ்வாறு நிறுத்தப்படும் வேட்பாளர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சின்னத்திலேயே போட்டியிடுவார்.