மே.வங்க மாநிலத்தில் அனல் பறக்கும் வகையில் தேர்தல் பிரச்சாரம் நடந்து வருகிறது.
நேற்று அங்கு பிரச்சாரம் செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்.
“தனது மருமகன் அபிஷேக் பானர்ஜியை முதல்-அமைச்சர் ஆக்குவதில் மட்டுமே மம்தா, கவனம் செலுத்துகிறார்” என அமித்ஷா கூறினார்.
இதற்கு கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி பதில் அளித்தார்.
“என் மருமகனை பற்றி விமர்சனம் செய்கிறீர்கள். உங்கள் மகன் ஜெய்ஷாவுக்கு பணம் வந்தது எப்படி?” என கேள்வி எழுப்பிய அவர் “நான் தெருவில் இறங்கி போராடும் குணம் உள்ள பெண். என் உயிர் உள்ள வரை மக்களுக்காக போராடுவேன்” என்று தெரிவித்தார்,
“குடிஉரிமை திருத்த சட்டத்தை மே.வங்க மாநிலத்தில் நான் அமல் படுத்த மாட்டேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
– பா. பாரதி