
வி.பழனிவேல் தனது வைத்தியநாதன் பிலிம் கார்டன் என்ற பட நிறுவனம் சார்பாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மளையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பிரமாண்டமான முறையில் தயாராகும் படம் ‘பாம்பாட்டம்’.
ஹாரர் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தை இயக்குநர் வடிவுடையான் இயக்குகிறார்.
அம்ரீஷ் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு பா.ராகவன் வசனம் எழுதுகிறார். பாடல்களை யுகபாரதி எழுத படத்தொகுப்பு பணிகளை சுரேஷ் அர்ஸும், ஸ்டண்ட் மாஸ்டராக சூப்பர் சுப்பராயனும் பணிபுரிகின்றனர். இனியன் ஜே.ஹரீஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில் ஜீவன் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மல்லிகா ஷெராவத் ஒப்பந்தமாகியுள்ளார்.
[youtube-feed feed=1]