டில்லி,

ந்தியாவின் நட்பு நாடான மாலத்தீவு சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதற்க இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

கடந்த மாத இறுதியில் மாலத்தீவு  சீனாவுடன்  தாராள வர்த்தக உறவு குறித்து ஒப்பந்தம் செய்துள்ளது. இது ஆபத்தானது என்று இந்தியா தெரிவித்துள்ளது.

இந்தியாவின் அண்டை நாடானா சீனா, அவ்வப்போது தனது படைபலத்தை காட்டி மிரட்டி வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், நமது நட்பு நாடான மாலத்தீவுடன் சீனா வர்த்தக ஒப்பந்தம் போட்டுள்ளது.

சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற இரு நாட்டு தலைவர்களிடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி,  கடல் வழி பாதை மூலம் வர்த்தகம் மேற்கொள்ள 100 மில்லியன் டாலரை சீனா மாலத்தீவுகளுக்கு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாலத்தீவுகள் நாட்டின் பாராளுமன்றத்தின்  அவசர கூட்டம்  கூட்டப்பட்டு,  சீனாவுடன் தாராள வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விவாதம் இன்றி ஒப்புதல் பெறப்பட்டது.

இதற்கு இந்தியா தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. அதில்,  மாலத்தீவு அரசின் இந்த செயல் அந்நாட்டில்  அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும்,  அந்நாட்டை  கடனில் தள்ளி விடும் எனவும் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து, மாலத்தீவு ஜனநாயக கட்சி தலைவரும் முன்னாள் அதிபருமான முகமது நசீத் கூறுகையில், ஆளும் கட்சியின் இந்த செயல் மாலத்தீவுகள் நாட்டிற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்றும், இந்த ஒப்பந்தம் காரணமாக சீனாவே வளர்ச்சி அடையும் என்று எச்சரித்துள்ளார்.