மாலே

மாலத்தீவின் தலைமை நீதிபதி அப்துல்லா சையத் மற்றும் ஒரு நீதிபதிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் மாலத்தீவின் தலைமை நீதிபதி அப்துல்லா சையத் கைது செய்யப்பட்டார்.   மாலத்தீவின் உச்சநீதிமன்ற அமர்வு யமீன் அப்துல் கய்யூமின் அரசியல் எதிரிகள் சிலரை விடுதலை செய்ததாக எழுந்த புகாரின் பேரில் அந்த அமர்வில் அவருடன் பணி புரிந்த மற்றொரு நீதிபதியும் கைது செய்யப்பட்டார்.

யமீன் அப்துல் கய்யூமின் அரசியல் எதிரிகளை வேண்டும் என்றே தேர்தல் சமயத்தில் விடுதலை செய்து அவர்களை தேர்தலில் போட்டியிட உதவ முயன்றதாகவும்,  அதன் மூலம் நாட்டில் தீவிரவாதத்தை தூண்டி விட முயன்றதாகவும் இந்த இரு நீதிபதிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் அப்துல்லா சையத் மீது தீவிரவாதக் குற்றமும் பதியப்பட்டுள்ளது.   இந்நிலையில் அரசு நிர்வாகத்திலும், சட்டத்துறையிலும் தடங்கள் விதித்தாக மற்றொரு குற்றச்சாட்டு அப்துல்லா சையத் மீது பதியப்பட்டது.   அந்த புகாரை விதித்த நீதிமன்றம் அவருக்கு சுமார் 5 மாத சிறை தண்டனை விதித்துள்ளது.