கோலாலம்பூர்:

மலேசியாவை சேர்ந்தவர் அபு சரீன் ஹூசைன் (வயது 33). பாம்புகளுடன் ரகசியமாக பேசக் கூடியவர் என்று பெயர் பெற்றவர். இவர் அந்நாட்டு தீயணைப்பு துறையில் பணியாற்றி வந்தார். அதோடு வீடுகளுக்குள் புகுந்துவிடும் பாம்புகளை பிடிக்கவும், பாம்பு பிடிக்க சக வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தார். மலேசியாவில் விஷம் பாம்புகள் அடங்கிய பகுதி அதிகம். மக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்ப டுத்தும் தன்மை கொண்ட 26 வகையான விஷப் பாம்புகள் இங்கு உள்ளது.

பாம்புகளின் நடவடிக்கையுடன் பழகுவதற்காக சில பாம்புகளை ஹூசைன் தனது வீட்டில் வளர்த்து வந்தார். பின்னர் அதை வனப்பகுதியில் விட்டுவிடுவார். பாம்புகளை கொண்டு பல டிவி ஷோக்களிலும் மிக ஆபத்து நிறைந்த சாகசங்களில் ஈடுபட்டு அசத்தியுள்ளார். இவர் பாம்புகளுடன் இருக்கும் புகைப்படங்கள், பாம்புக்கு முத்தம் கொடுக்கும் வீடியோக்கள் பல சமூக வலை தளங்களில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பஹாங் மாநிலம் பென்டாங் பகுதியில் நாகப் பாம்பு ஒன்று ஹூசைனை கடித்துவிட்டது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று இற ந்தார். அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்தனர்.

முன்னதாக 10 அடி உயரம் கொண்ட நாகப் பாம்புவை ஹூசைன் திருமணம் செய்து கொண்டு அதோடு வாழ்ந்து வருகிறார் என்று ‘டெய்லி மெயில் ஸ்டோரி’ என்ற பத்திரிக்கை செய்தி வெளியிட்டது. 5 ஆண்டுக்கு முன்பு இறந்துபோன தனது பெண் தோழியின் நினைவாக இந்த பாம்பை திருமணம் செய்திருப்பதாக கூறி செய்தி வெளியானது. இதை ஹூசைன் மறுத்தார்.

பேஸ்புக்கில் இருந்த பாம்புக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படங்களை அந்த பத்திரிக்கை வெளியிட் டுள்ளது என்று ஹூசைன் தெரிவித்திருந்தார் என்பது குறுப்பிடத்தக்கது. மேலும், ஹூசைன் பாம்பு கடிக்கு ஆளானது இது முதன் முறை கிடையாது. 2015ம் ஆண்டு ஒரு முறை நாகப் பாம்பு கடித்து 2 நாட்கள் கோமா நிலைக்கு சென்று உயிர் பிழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]