சென்னை,

ரசுமுறை சுற்றுப்பயணம் வந்துள்ள மலேசிய பிரதமர் நேற்று இரவு சென்னை வந்தார். அவரை தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் வரவேற்றார்.

நேற்று இரவு கவர்னர் மாளிகையில் தங்கிய அவர், இன்று காலை  நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படம் மலேசியாவை மையமாகக் கொண்டது என்பதோடு, படத்தின் முக்கிய காட்சிகளும் மலேசியாவிலேயே படமாக்கப்பட்டன.

மேலும் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கின் குடும்பத்தினர் ரஜினியின் ரசிகர்கள் என்றும் சொல்லப்படுகிறது.

இன்று காலை 10.30 மணியளவில், போயஸ்தோட்ட பகுதியில் அமைந்துள்ள ரஜினிகாந்த் இல்லத்திற்கு வந்த  நஜீப் ரசாக்குடன் மலேசிய அதிகாரிகளும் கார்களில் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு சென்றனர்.

நஜீப் ரசாக்கை ரஜினிகாந்த் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்-ரஜினிகாந்த் சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.

 

[youtube-feed feed=1]