மும்பை

லேசியாவை சேர்ந்த ஒருவர் இந்தியாவுக்கு மனித உயிரணுக்களை கடத்தி வந்த போது பிடிபட்டு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

செயற்கை கருத்தரிப்பு மையங்கள் நாட்டில் மிகவும் பெருகி வருகின்றன. இந்த மையங்களுக்கு தேவையான உயிரணுக்கள் பல நாட்டில் இருந்தும் சட்ட ரீதியாக எடுத்து வரப்படுவதாக தகவல்கள் வெளியாகின. இவ்வாறு உயிரணு தானம் செய்வது மலேசியா போன்ற இஸ்லாமிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.

மும்பை விமான நிலையத்தில் மலேசியாவை சேர்ந்த ஒருவர் தனது பெட்டியினுள் உயிரணுக்களை மறைத்து இந்தியாவுக்கு கடத்தி வந்துள்ளது கன்டறியப்பட்டது. அவரை விசாரித்த போது ஏற்கனவே தாம் இது போல கடத்தி வந்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ளார். அவரது மொபைலில் மும்பையில் உள்ள மருத்துவமனையில் இருந்து வந்த குறும் தகவலகள் இருந்துள்ளன.

இதனால் அந்த மருத்துவ மனைக்கும் இவர் கடத்தியதற்கும் தொடர்பு உள்ளதாக புலனாய்வு துறையினர் சந்தேகம் கொண்டனர். அந்த மருத்துவமனையின் செயற்கை கருத்தரிப்பு பிரிவு தலைவர் கோரல் காந்தி இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். தங்களுக்கு தொழில் முறையில் போட்டிகள் உள்ளதால் போட்டியாளர்கள் இவ்வாறு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மலேசிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இந்த மனித உயிரணுக்கள் எங்கிருந்து யாருக்கு அனுப்பப்பட்டது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.