கோலாலம்பூர்
மலேசியாவின் எதிர்க்கட்சிகள் கூட்டணி 92 வயதான முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது வை தேர்ந்தெடுத்துள்ளது.
தற்போது மலேசியாவில் பிரதமர் நஜீப் ரசாக் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகள் பிரதமர் மேல் அவர் உருவாக்கிய முதலீட்டு நிதி அமைப்பில் இருந்து கோடிக்கணக்கான டாலர் ஊழல் செய்ததாக புகார் கூறி உள்ளன. ஆனால் இதை பிரதமர் நஜீப் மற்றும் அந்த நிதி அமைப்பின் அதிகாரிகள் மறுத்துள்ளனர். மலேசியாவில் வரும் ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் முன் கூட்டியே நடைபெறலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
மலேசியாவின் நான்கு எதிர்க்கட்ட்சிகள் ஒன்றிணைந்து முன்னாள் பிரதமர் மகாதிர் முகமதுவை பிரதம வேட்பாளராக அறிவித்துள்ளன. இந்த எதிர்கட்சிகளின் ஒப்பந்தப்படி தற்போது சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராகிம் மனைவி வான் அஜீசா துணைப் பிரதமராக அறிவிக்கப் பட்டுள்ளார்.
இந்தக் கூட்டணி வெற்றி பெற்றால் அமையப் போகும் அரசி அன்வர் இப்ராகிமுக்கு மன்னிப்பு அளித்து விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப் படுகிறது. அன்வர் இப்ராகிம் விடுதலை அடைந்த பின்னர் மகாதிர் முகமது அவரிடம் பிரதமர் பதவியை ஒப்படைப்பார் எனவும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
தற்போது வெளி வந்துள்ள ஒரு கருத்துக் கணிப்பின் படி மகாதிர் முகமது கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ளதாக தெரிய வருகிறது. மேலும் தற்போது ஆட்சியில் உள்ள நசீப் பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பார் என அந்தக் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.