திருமணக் கோலத்தில் நூரியானா

கோலாலம்பூர்

லேசிய முன்னாள் பிரதமர் நசீப் ரசாக் மகள் நூரியானா மலேசிய காவல்துறை மீது புகார் அளித்துள்ளார்.

நடந்து முடிந்த மலேசிய தேர்தலில் நசீப் ரசாக் தோல்வி அடைந்தார்.   நசீப் மீது எழுந்த ஊழல் புகார்களை விசாரிக்க புதிய குழு ஒன்றை புதிய பிரதமராக பதவி ஏற்ற மகாதீர் அமைத்தார்.   அந்த குழுவின் உத்தரவுக்கிணங்க மலேசிய காவல்துறை முன்னாள் பிரதமர் நசீப் ரசாக் இல்லம்,  அலுவலகம் மற்றும் அவரது உறவினர்களின் இல்லத்தில்  சோதனை நடத்தி ஏராளமான பணம் மற்றும் பொருட்களை கைப்பற்றியது.

அவ்வாறு சோதனை நடத்தப்பட்ட இடங்களில் நசீப் ரசாக்கின் மகள் நூரியானாவின் இல்லமும் ஒன்றாகும்.   இவரது இல்லத்தில் பல விலை உயர்ந்த நகைகள் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.   நடைபெற்ற ஊழலில் இவருக்கும் பங்கு உள்ளதாக எழுந்த சந்தேகத்தில் இந்த சோதனை நடைபெற்றது.

நூரியானா தற்போது மலேசியக் காவல்துறை மிது புகார் தெரிவ்த்துள்ளார்.  அதில் அவர், “காவல்துறையினர் இந்த சோதனையின் போது என்னிடமும் என் குடும்பத்தாரிடமும் மிகவும் கடுமையாக நடந்துக் கொண்டனர்.   அவர்கள் என்னிடம் இருந்து பறிமுதல் செய்தவை என்னுடைய திருமணத்தில் எனக்கு அளிக்கப்பட்ட பரிசுப் பொருட்களாகும்.   அதை நான் தெரிவித்தும் அதைக் கேளாமல் எனது பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.