மலேசியா:
அரசியல் கட்சிகளின் அனைத்துலக மாநாட்டில் கலந்துகொள்ள இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ஷே மலேசியா வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கை தூதரை அங்குள்ள தமிழர்கள் அடித்து உதைத்தனர்.
ராஜபக்ஷேவுக்கு மலேசியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் தமிழர்கள் அவருடன் வந்த இலங்கை தூதரை மலேசிய விமான நிலையத்தில் வைத்து சராமாரியாக அடித்து உதைத்தனர்.
சில நாட்களுக்கு முன்பு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசிய அரசியல் கட்சிகளின் 9-வது அனைத்துலக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே, கோலாலம்பூருக்கு வந்தார்.
மலேசியாவிற்கு வந்த ராஜ பக்சேவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, புத்ரா உலக வர்த்தக மைய கட்டிடம் முன்பு மலேசிய தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த 100-க்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டம் நடத்தி எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர்.
இதற்கிடையில், மலேசியாவிற்கான இலங்கை தூதர் இப்ராஹீம் அன்சார் , கோலாலம்பூர் விமான நிலையத்தில் தமிழர்களிடம் சிக்கி கொண்டார். அவரை தமிழர்கள் அடித்து உதைத்தனர். மலேசிய போலீசார் அவரை தமிழர்களிடம் இருந்து சென்றனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.