மதிய செய்திகள்!

Must read

 
Afternoon news
உளுந்தூர்பேட்டை அருகே அரசு பேருந்து – கார் நேருக்கு நேர் மோதி விபத்து : 4 பேர் பலி/ உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். குரோம்பேட்டையை சேர்ந்த ஆறுமுகம் குடும்பத்தினருடன் காரில் நாமக்கல் சென்று திரும்பியுள்ளார். உளூந்தூர்பேட்டை அடுத்த எலவனாசூர்பேட்டை புறவழிச்சாலை அருகே வந்த போது சென்னையில் இருந்து வந்த அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துள்ளானது.  இதில் காரில் வந்த பழனியம்மாள், ஜெயந்தி, ஆறுமுகத்தின் மகள் ஷர்மிளா, மற்றும் ஓட்டுநர் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 6 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் இருந்து செல்லும் 2 விமானங்கள் ரத்து. சென்னை விமான நிலையத்தில் இருந்து குவைத், துபாய் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் விமன நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. விமானத்தில் பயணம் செய்யவிருந்த 360 பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் புகுந்த காட்டெருமைகள்: பொதுமக்களை விரட்டியதால் பரபரப்பு கொடைக்கானால்: கொடைக்கானால் பேருந்து நிலையத்தில் புகுந்த காட்டெருமைகள் பொதுமக்களை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பரங்குன்றம் சரவண பொய்கை குளத்தில் விஷம் கலப்பு : நீரை வெளியேற்ற பக்தர்கள் கோரிக்கை திருப்பரங்குன்றம் சரவண பொய்கை குளம் நீர் மூலமாக கொடிய தொற்றுநோய்கள் பரவுவதால் உடனடியாக அதில் இருந்து அசுத்த நீரை வெளியேற்ற வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்திடம் பணம் கேட்டு மிரட்டுவதாக புகார். எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்திடம் பணம் கேட்டு பலர் மிரட்டுவதாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் சேதுராமன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
புதுச்சேரியில் ஆட்டோ கட்டணம் நிர்ணயம். புதுச்சேரியில் ஆட்டோ கட்டணம் 1.8 கி.மீ. தொலைவுக்கு ரூ.25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ கட்டணம் நிர்ணயம் விரைவில் அமல்படுத்தப்படும் என அமைச்சர் ஷாஜகான் அறிவித்துள்ளார்.
ஒடிசாவில் குட்டியை காப்பாற்றச் சென்றபோது ஆற்று வெள்ளத்தில் சிக்கிய யானைக் கூட்டம்,  புவனேஸ்வர்: ஒடிசாவில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய யானை கூட்டத்தை காப்பாற்ற வனத்துறை போராடி வருகிறது.
மத்திய அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி. சவுதியில் கொத்தடிமைகளாக உள்ள தமிழக மீனவர்களை மீட்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் தர வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொத்தடிமைகளாக உள்ள தமிழக மீனவர்கள் 62 பேரை மீட்க கோரி ராமநாதபுரத்தை சேர்ந்த திருச்செல்வம் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் மீனவர்களை மீட்க கோரிய வழக்கில் கால அவகாசம் கேட்பது ஏன் என மத்திய அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
நாளை அனைத்துக் கட்சி கூட்டம்: ராஜ்நாத் சிங் தகவல்.  ஜம்மு-காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்த பின் அனைத்துக் கட்சி கூட்டம் குறித்து அறிவித்தார்.
 
சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.112 குறைந்துள்ளது.
ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 976 ஆக உள்ளது.
ஒரு கிராம் ரூ.2,872-க்கு விற்கிறது.
வெள்ளியும் கிலோவுக்கு ரூ.180 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.48 ஆயிரத்து 380ஆக உள்ளது. மேலும், ஒரு கிராம் வெள்ளி ரூ.51.80 ஆகவும் உள்ளது
பீகாரில் மதுபான பாட்டில்கள் கடத்திய வாலிபரை கட்டி வைத்து அடித்த மக்கள். பீகார் மாநிலம் சஹாப்ராவில் நேற்று மதுபான பாட்டில்கள் கொண்டு சென்ற வாலிபரை உள்ளூர் மக்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிர்த்து செப்டம்பர் 9ந்தேதி கர்நாடகா பந்த்! காவிரியில் தண்ணீர் திறந்துவிட உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்ததை தொடர்ந்து கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்த அம்மாநில விவசாயிகள் மற்றும் கன்னட  அமைப்புகள் தீர்மானித்துள்ளனர்.
முஸ்லிம் குழந்தைகளுக்கு குரான் கற்பிக்கும் இந்து சிறுமி.  உ.பி.,யில் மேற்கு பகுதியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், 35 முஸ்லிம் குழந்தைகளுக்கு குரான் குறித்து பாடம் கற்பித்து வருகிறார்.உ.பி.,யின் ஆக்ராவின் சஞ்சய் நகர் பகுதியை சேர்ந்த பூஜா குஷ்வாகா என்ற மாணவி, கோவில் வளாகத்தில், முஸ்லிம் குழந்தைகளுக்கு இலவசமாக குரான் குறித்து பாடம் கற்பித்து வருகிறார். இது தொடர்பாக பூஜாவிடம் குரான் படிக்கும் 5 வயது சிறுமியின் தாயார் ஒருவர் கூறுகையில், இந்த வயதில், மாணவியின் திறமையை பார்த்து ஆச்சர்யமாக உள்ளது. எனது குழந்தைக்கு இந்த மாணவி ஆசிரியையாக இருப்பதில் மகிழ்ச்சியாக உள்ளதுது. அந்த சிறுமியின் மதம் குறித்த எண்ணம் எனக்கோ மற்ற சிறுமிகளின் பெற்றோர்களுக்கோ வரவில்லை” எனக்கூறினார்.பூஜா குஷ்வாகா கூறுகையில், “பல வருடங்களுக்கு முன், முஸ்லிம் தந்தைக்கும், இந்து மதத்தை சேர்ந்த தாயாருக்கும் பிறந்த சங்கீதா பேகம் என்ற பெண், குழந்தைகளுக்கு குரான் கற்பித்து வந்தார். இதில் ஆர்வமடைந்த நான் அந்த வகுப்பில் கலந்து கொண்டேன். அதில் குரானை மற்றவர்களை விட நன்கு கற்றுக்கொண்டேன்” எனக்கூறினார்.
ஒபாமாவை கெட்ட வார்த்தையில் சகட்டுமேனிக்கு திட்டிய பிலிப்பைன்ஸ் அதிபர். அமெரிக்கா அதிபர் ஒபாமாவை மிக மோசமான கெட்ட வார்த்தைகளில் சகட்டுமேனிக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் திட்டிய சம்பவம் சர்வதேச நாடுகளை அதிர வைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் அதிபர் ரோடிரிகோவுடனான ஒபாமா சந்திப்பை ரத்து செய்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
பீகாரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை: வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது; இயல்பு வாழ்க்கை முடக்கம்  பீகார் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் 12 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவிற்கு மழை பெய்து வருவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சகணக்கானோர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இதில் மழைக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 198 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
முதல்வர் ஜெயலலிதா விரைவில் கொடநாடு பயணம். தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் கொடநாடு சென்று ஓய்வு எடுத்து விட்டு சில நாட்கள் அங்கு அலுவலக பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிலத்தை அபகரிக்க கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பலை கைது செய்யாதது ஏன்? எஸ்பி நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு நிலத்ைத அபகரிக்க கொலை வெறி தாக்குதல் நடத்திய கும்பலை கைது செய்யாதது ஏன் என்று உயர் நீதிமன்றம் போலீசுக்கு கேள்வி எழுப்பி, திருப்பூர் எஸ்.பி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது
சபாநாயகருக்கு திமுக கொறடா சக்கரபாணி கோரிக்கை. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினின் நேர்முக உதவியாளர் ஆதிசேஷனை தகுதியிறக்கம் செய்தது ஏன் என திமுக சட்டமன்ற கொறடா சக்கரபாணி சட்டப்பேரவை தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். துணை செயலாளர் அந்தஸ்தில் சிறப்பு நேர்முக உதவியாளராக ஆதிசேஷனை நியமிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஸ்டாலின் பரிந்துரைப்படி துணைச் செயலாளர் அந்தஸ்தில்ஆதிசேஷன் நியமிக்கப்பட்டார் என அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பிறந்து 18 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை 3-வது மாடியில் இருந்து தூக்கிய வீசிய கொடூரம். உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் பிறந்து 18 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை 3-வது மாடியில் இருந்து தூக்கிய வீசிய கொடூரம் அரங்கேறியுள்ளது. கான்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சரிதா என்ற பெண் குழந்தையை காணவில்லை என்று அலறினார். இதனையடுத்து குழந்தையை தேடும் பணியில் போலீஸ், மற்றும் மருத்துவ ஊழியர்கள் ஈடுபட்டனர்.  அப்போது ஒரு பகுதியில் குழந்தையின் அழுகுரல் கேட்ட இடத்திற்கு ஓடிய ஊழியர்கள் அங்கு இருந்த தடுப்பு கம்பியில் குழந்தை துணியுடன் சிக்கியிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை அடுத்து சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.  அப்போது சரிதா வார்டை விட்டு வெளியே சென்று விட்டு பின்னர் வார்டுக்கு திரும்பும் போது குழந்தை இல்லாதது தெரிய வந்தது.
 
எத்தியோப்பிய சிறையில் பயங்கர தீவிபத்து: சிறைக்கைதிகள் 23 பேர் பலி. எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவின் புறநகர் பகுதியில் உள்ள மத்திய சிறைச்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 23 சிறைக்கைதிகள் உயிரிழந்துள்ளனர்.
பழனி அருகே மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல். பழனி அருகே அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். 40% மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
செரினா சாதனை வெற்றி.  யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு முன்னேறிய அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், கிராண்ட்ஸ்லாம் அரங்கில் அதிக வெற்றி பெற்ற நட்சத்திரம் என்ற சாதனை படைத்தார்.
மெகபூபாவை நாய் வாலுடன் ஒப்பிட்ட சுப்ரமணியசாமி/ ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெகபூபா முப்தியை நாய் வாலுடன் பா.ஜ., எம்.பி., சுப்ரமணியசாமி ஒப்பிட்டு பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக அவர் தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில், காஷ்மீர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும். முதல்வர் மெகபூபா, நாய் வாலை போன்றவர். நாய் வாலை நேராக்க முடியாது. மெகபூபாவையும் மாற்ற முடியாது. மெகபூபாவுடன் பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளது. தன்னை மாற்றிக்கொள்வார் என்ற நம்பிக்கையில் தான் காஷ்மீரில் அவரது கட்சியுடன் பா.ஜ., கூட்டணி வைத்துள்ளது. லால்டெங்காவும் பயங்கரவாதியாக இருந்தவர்தான். ஆனாலும், அவர் மிசோரம் முதல்வராக தேர்வு பெற்று வெற்றிகரமாக ஆட்சி நடத்தி வருகிறார் எனக்கூறினார்.
அமைச்சர் கருப்பண்ணனை பதவிநீக்கம் செய்யக்கோரி விவசாயிகள் மறியல். பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசான பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடாததை கண்டித்தும் , விவசாயிகள் கோடீஸ்வரர்கள்; பைனான்ஸ் கடைகள் நடத்துகிறார்கள் என்று விவாயிகளை கேவலப்படுத்தி பேசிய சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணனை கண்டித்தும், இன்று ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் விவசாயிகள் சாலை மறியல் செய்தனர். கீழ்பவானி பாசன பகுதி சுமார் ஒன்னேகால் லட்சம் ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த பாசான பகுதிக்கு தண்ணீர் திறந்துவிடாததால் விவசாயம் செய்யமுடியாத நெருக்கடிக்கு உள்ளாகியுள் ளார்கள் விவசாயிகள்.
சட்ட நிபுணர்களுடன் முதலமைச்சர் சித்தராமையா ஆலோசனை பெங்களூரு: காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து கர்நாடக சட்ட நிபுணர்களுடன் முதலமைச்சர் சித்தராமையா ஆலோசனை நடத்தி வருகிறார். காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து ஆலோசனை கூட்டத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது. மேலும் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணராஜ சாகர் அணை 4 நாட்களுக்கு மூட கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவு  !
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக விவசாயிகள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இதையடுத்து கிருஷ்ணராஜ சாகர் அணையை 4 நாட்களுக்கு மூட அம்மாநில முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.அங்குள்ள பிருந்தாவன் பூங்காவும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்யாறு காமராஜ் நகரை சேர்ந்த முபாரக்(23) என்பவர் செய்யாறு ஆற்றில்  மர்மநபர்களால் அடித்து கொலை . செய்யாறு காவல்துறை யினர் விசாரணை.
 
ஆதார் எண் வழங்கும் பணி அக்டோபர் 1 முதல் தமிழக அரசின் அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்திடம் அளிக்கப்பட உள்ளது.தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம் மேற்கொண்ட கணக்கெடுப்பு விவரங்களை பாரத மிகு மின் நிறுவனம் கணினியில் சேகரித்து வருகிறது. இந்த நிலையில், பாரத மிகு மின் நிறுவனத்திடம் இருந்து ஆதார் எண் வழங்கும் பணியை தமிழக அரசின் அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.இதற்கான பூர்வாங்கப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அக்டோபர் 1 முதல் 400-க்கும் மேற்பட்ட இ. சேவை மையங்களில் ஆதார் எண் வழங்கப்பட உள்ளன.
எஸ்ஆர்எம் பச்சமுத்துவின் ஜாமின் மனு மீதான விசாரணையை செப்டம்பர் 8ந்தேதிக்கு ஒத்துவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு.
வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் தமிழக அரசின் இடைக்கால மனு விசாரனையில் உச்சநீதிமன்ற உத்தரவு.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிட தடை விதிக்க முடியாது திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
நீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம். சென்னை இராயபுரத்திலுள்ள பி.எ.கே.பழனிசாமி பள்ளி முதன்மை நிர்வாகிக்கும்  , தலைமை ஆசிரியருக்கும் கருத்து வேறுபாடுகள் காரணமாக பணிப்போர் நடைபெறறு வந்துள்ளது. இதனால் தலைமை ஆசிரியரை பணி நீக்கம் செய்துள்ளார் முதன்மை நிர்வாகி. தலைமை ஆசிரியர் மீண்டும் வேண்டும் என்று கோரி மாணவர்கள் அப்பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்: உளுந்தூர்பேட்டையில் மர்மமான முறையில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்த உண்டு உறைவிடப் பள்ளிக்கு செப்டம்பர் 11 வரை விடுமுறை அளித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவு.
கர்நாடக மாநிலம் மாண்டியாவில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைவதால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..
புதுச்சேரி: காவிரியில் நீர் விடாத கர்நாடக அரசை கண்டித்து புதுச்சேரி சட்டப்பேரவைக்கு கர்நாடக அரசைக கண்டித்து எதிர்ப்பு பதாகைகளை ஏந்தி வந்த அதிமுகவினர். காவிரியில் தண்ணீர் விடாத கர்நாடக  அரசை கண்டித்து  புதுச்சேரி  சட்டப்பேரவை  கண்டன தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், காவிரியில் தண்ணீர்  விட மத்திய  அரசு நடவடிக்கை  எடுக்க  வலியுறுத்தியும் பேரவையில் தீர்மானம்  நிறைவேற்ற கோரியும் அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர்  அன்பழகன்  தலைமையில்  சட்டமன்ற  உறுப்பினர்கள் பாஸ்கர், அசானா வெளிநடப்பு.
நெல்லை மாவட்ட  அணைகளின் நீர் மட்டம் (06-09-16)
பாபநாசம்:
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 45.10 அடி
நீர் வரத்து : 328.24 கன அடி
வெளியேற்றம் : 804.75 கன அடி
சேர்வலாறு :
உச்ச நீர்மட்டம்: 156 அடி
நீர் இருப்பு : 58.73  அடி
மணிமுத்தாறு :
உச்ச நீர்மட்டம்: 118 அடி
நீர் இருப்பு : 57.74 அடி
நீர் வரத்து : 23 கன  அடி
வெளியேற்றம் :  45 கன அடி
திருச்சி மாவட்டம்  துறையூர்அடுத்த ஆதனூர் உள்ளூரில் லியாகத்அலி வீட்டில் கை எரிகுண்டு வீச்சு.புலிவலம் போலீசார் விசாரணை
பேருந்துகள்  நிறுத்தம். காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக மேட்டூர் வழியாக மாதேஸ்வரன் மலைக்கு செல்லும் பேருந்துகள் மற்றும், கர்நாடகாவிற்கு இயக்கப்படும் பேருந்துகள் இயக்கப்படவில்லை.  பொது மக்கள் அவதி….
சேலம் மாவட்ட சங்ககிரி வட்டம் கல்வடங்கம் காவிரி ஆற்றில் நேற்று மாலை விநாயகர் சிலை கரைக்க வந்த எளம்பிள்ளையைச் சேர்ந்த சீனி, தீபக் ஆகியோர் நீரில் மூழ்கி மாயமான இருவரின் சடலத்தை சற்று முன் மீட்டு தேவூர் போலீசார் விசாரணை
திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள மேல்பாலத்தில் பிறந்து ஒரு நாள் ஆன ஆண் குழந்தை சடலமாக மீட்பு-பச்சிளம் குழந்தையின் உடலை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பப்பட்டது-திருவண்ணாமலை கிழக்கு காவல் துறையினர் விசாரணை.
வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த தண்ணீர் பந்தல் அருகே இரு சக்கர வாகனங்கள் இரண்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் முத்தமிழ்ச்செல்வன் (31) என்ற வாலிபர் பலி!. 3 பேர் படுகாயம். நாட்றம்பள்ளி போலிசார் விசாரணை.
 
8ம் வகுப்பு மாணவியை பள்ளி ஆசிரியை  தாக்கியதால் உடலெல்லாம் தடித்து 2 நாட்கள் காய்ச்சலில் அவதிப்பட்ட பெண்ணிற்கு திடீரென  வழிப்பு அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை , போலீசார் விசாரணை
திருப்பூர் பூலுவபட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி மகுடீஸ்வரன் என்பவர் விஷம் அருந்தி தற்கொலை காரணம் குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை ,
திருப்பூர் : இன்று அதிகாலையில்   ஊத்துக்குளி  அருகே  விபத்து 15க்கும் மேற்பட்டோர்  படுகாயம். ஈரோடு To கோவை சென்ற அரசு பேருந்தும்  Tata ace.  சீத்தாப்பழம்   ஏற்றி வந்த மினி டோர் வண்டியும்   மோதி விபத்து.காயம் அடைந்தவர்கள் ஈரோடு மாவட்டம் பெருந்துறை மருத்துவமனையில் அனுமதி
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இருந்து சிவகங்கைக்கு கல்லூரி மாணவிகளின் நலன்கருதி  தனியாக மகளிர் பேருந்தை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் மாரியம்மன் கென்னடி தொடங்கி  வைத்தார் ..
திருமணமான 10 மாதத்தில் பெண் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தற்கொலை. காஞ்சிபுரம் – விப்பேடு – சந்தானம் என்பவரின் மனைவி அமுல் வயது22 திருமணமான 10 மாதத்தில் பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை , சிகிச்சை பலனின்றி மருத்துவ மனையில் உயிரிழைப்பு .ஆட்டோ கேட்டு வரதட்சட்சணை கொடுமை என தகவல்.தாலுக்கா காவல் துறையினர் விசாரணை

More articles

Latest article