கோலாலம்பூர்:

மலேசிய நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நஜிப் ரசாக் பிரதமர் பதவியை இழந்தார். மகாதீர் முகமது பிரதமர் ஆனார்.

மலேசியாவில் 2006-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட மங்கோலியா நாட்டு மாடல் அழகி அல்டன்ட்டுயா ஷாரிபு கொலை வழக்கில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிறகு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து இந்த வழக்கு மறு விசாரணை நடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 2006ம் ஆண்டில் இந்த கொலை நடந்தபோது நஜிப் ரசாக் துணை பிரதமராகவும், பாதுகாப்பு துறை அமைச்சராகவும் இருந்தார்.

2002-ம் ஆண்டில் பிரான்சில் 2 நீர்மூழ்கி கப்பல் வாங்கியதில் நடந்த ஊழல் வெளிவராமல் தடுக்கும் வகையில் அல்டன்ட்டுயா கொல்லப்பட்டதாக அப்போது செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் காரணமாக நஜிப் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். இதை தொடர்ந்து அழகி கொலை வழக்கிலும் அவரிடம் விசாரணை நடத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.