கோலாலம்பூர்:
மலேசியா தலைநகர் கோலாலம்பூர் விமானநிலையத்தில் கடத்தி வரப்பட்ட 4 மில்லியன் ரிங்கெட் மதிப்பிலான யானை தந்தங்கள், 3.9 மில்லியன் ரிங்கெட்ஸ் மதிப்பிலான எறும்புண்ணி செதில்கள் ஆகியவற்றை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
‘‘தந்தங்கள் எத்தியாட் விமானத்தில் நைஜீரியாவில் இருந்து அபுதாபி வழியாககடத்தி வரப்ப்டடுள்ளது’’ என்று மூத்த சுங்கத் துறை அதிகாரி முகமது புத்சி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், ‘‘எறும்புண்ணி செதில்கள் எத்தியோப்பியா விமானம் மூலம் காங்கோ குடியரசில் இருந்து கடத்தி வரப்பட்டுள்ளது. இவை போலி முகவரிகளுடன் கோலாலம்பூர் சரக்கு முனைய குடோனில் இருப்பு வைக்கப்பட்டிருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டது.
சர்வதே அளவில் எறும்புண்ணிகள் அதல் செதில்களுக்காக வேட்டையாடப்படும் விலங்கினமாகும். மருத்துவ குணம் இருப்பதால் சில சிகிச்சை முறைகளுக்கு இது பயன்படுத்தப்படுகிறது. அதனால் கள்ளச் ச ந்தைகளில் செதில்களின் விற்பனை நடக்கிறது.
மேலும், இந்த ஆண்டில் மட்டும் கோலாலம்பூர் விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட வன உயிரினங்களின் உடற்பாகங்கள் அதிகளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. எங்களது பாதுகாப்பு நடைமுறைகள் கடத்தல் ஆசாமிகளால் மீறப்படுகிறது’’ என்று புத்சி தெரிவித்தார்.
யானை தந்தங்களை ஆசியாவுக்கு கடத்தி வருவதற்காக ஆப்ரிக்காவில் தினமும் 55 யானைகள் கொல்லப்படுகிறது. கடந்த மாதம் உலகளவில் அதிப்படியாக 7 டன் ஐவரி தந்தங்கள் மலேசியாவில் இரு ந்து கன்டெய்னரில் கடத்தி வரப்பட்டபோது ஹாங்காங்கில் பிடிபட்டது.
சீனாவில் அதிகப்படியாக ஐவரி தந்தங்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த வர்த்தகம் இந்த ஆண்டோடு நிறுத்தப்படும் என்று சீனா உறுதி அளித்துள்ளது.