நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பாக இந்திய தூதரிடம் தனது ஆட்சேபனையை மலேஷியா அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மலேஷிய வெளியுறவுத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, “நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியவர் மீது கட்சி ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கையை வரவேற்கிறோம்.”
இருந்தபோதும், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை வலியுறுத்த வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுவதை நிறுத்த வேண்டும், இஸ்லாமிய எதிர்ப்பு மனநிலையை கைவிட இந்திய அரசுடன் கைகோர்த்து செயல்பட மலேசிய அரசு தயாராக உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத், சவுதி அரேபியா, கத்தார், ஈரான், பாகிஸ்தான், இந்தோனேஷியா உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளைத் தொடர்ந்து மலேஷியாவும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ள நிலையில் இந்த விவகாரம் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு சர்வதேச அளவில் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளதாகக் கருதப்படுகிறது.