கோலாலம்பூர்

லேசியா அரசு தங்கள் நாட்டு மக்களுக்கு வடகொரியா செல்ல தடை விதித்துள்ளது.

வடகொரியா ஏவுகணை பரிசோதனைக்கு உலகின் பல நாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்தாலும் தொடர்ந்து அந்நாடு நிறுத்தவில்லை.  அத்துடன் அமெரிக்காவுடன் ஏற்பட்டுள்ள தகராறு காரணமாக ஆயுத குவிப்பில் ஈடுபட்டு வருகிறது.  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது நாடு வடகொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் வடகொரியா – மலேசியா நாடுகளுக்கிடையே நடைபெற இருந்த கால் பந்து போட்டி இருமுறை தள்ளி வைக்கப்பட்டிருந்தது.  இன்று மலேசியா வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.  அதில், “மலேசிய மக்கள் வடகொரியா நாட்டுக்கு பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.  அரசின் இந்த தடை உத்தரவு அடுத்த அறிவிப்பு வரும் வரை நீடிக்கும்” என தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பாகவே வட கொரியா மற்றும் மலேசியா அரசு இதுபோல தங்களின் மக்களுக்கு தடை விதித்திருந்தது.  கடந்த மார்ச் மாதம் இருநாடுகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு காணப்பட்டு தடை விலக்கிக் கொள்ளப்பட்டிருந்தது.  குவைத், போன்ற நாடுகள் வடகொரியாவில் இருந்து தங்கள் தூதரை திரும்ப அழைத்துள்ள நாடுகளில் வடகொரியாவுடன் தூதரக தொடர்பில் இருக்கும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.