இந்தியாவில் இருந்து மலேசியா செல்ல டிசம்பர் முதல் விசா தேவையில்லை என்று மலேசிய பிரதமர் அறிவித்துள்ளார்.
பி.ஜே.பி. கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியா மற்றும் சீனாவில் இருந்து மலேசியா-வுக்கு வரும் பயணிகள் 30 நாட்கள் வரை தங்குவதற்கு விசா தேவையில்லை என்று அறிவித்துள்ளார்.

இதனால் மலேசியா-வுக்கு அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வருவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்றும் அதனால் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை மலேசியாவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் நாடு முழுவதும் உள்ள பொதுப் போக்குவரத்து வசதிகள் மற்றும் விமான நிலையங்களை சீர்செய்ய அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்கும் என்றும் அன்வர் தெரிவித்தார்.
வழக்கமான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் கூடிய புதிய விசா நடைமுறை தொடர்பான கூடுதல் விவரங்களை உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுஷன் இஸ்மாயில் நாளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
[youtube-feed feed=1]