டில்லி :
மலேசியாவில் உள்ள ஜாகிர் நாயக்கை இந்திய அரசிடம் ஒப்படைக்க அந்நாட்டு அரசு ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பயங்கரவாதத்தை துாண்டும் வகையில் செயல்பட்டதாக இஸ்லாமிய மதப்பிரசாகர் ஜாகிர் நாயக் மீது மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது.
இதற்கிடையே அவர் மலேசியா தப்பிச் சென்றார். இந்த நிலையில் அவரை நாடு கடத்தி ஒப்படைக்கும்படி, மலேசியா அரசுக்கு முறைப்படி கோரிக்கை வைக்கப்படும் என, வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர், ரவீஷ் குமார், “:ஜாகிர் நாயக் மீதான வழக்கின் விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து, அவரை நாடு கடத்தி ஒப்படைக்கும்படி, மலேஷிய அரசுக்கு, முறைப்படி கோரிக்கை வைக்கப்படும். அதற்கான பணிகள் விரைவில் துவங்கும்” என்று தெரிவித்தார்.
அதே நேரம், ஏற்கெனவே மலேசிய அரசுத் தரப்பிடம் இந்தி அரசு தரப்பில் இது குறித்து பேசியதாகவும் முறைப்படி கோரிக்கை வைத்தால் ஜாகிர் நாயக்கை ஒப்படதைப்பதாக மலேசியா தெரிவித்ததாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது.