கோழிக்கோடு:

தேசிய விருது பெற்ற மலையாள நடிகை சுரபி லட்சுமி. இவர் ஓணம் பண்டிகையை முன்னிட்டு மீடியா ஒன் என்ற தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த சிறப்பு நிகழ்ச்சியின் ஒளிப்பதிவு கோழிக்கோடில் உள்ள ஒரு ரெஸ்டாரன்டில் பதிவு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சி ஓணம் பண்டிக்கை அன்று ஒளிபரப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் குறிப்பிட்ட அந்த ரெஸ்டாரென்டிற்கு தான் அடிக்கடி வருவேன் என்றும், இங்கு மாட்டு இறைச்சி முக்கியமான சைடிஷ் என்று தெரிவித்திருந்தார். மேலும், அதில் சுரபி மலபார் புரோட்டாவுடன் ம £ட்டு இறைச்சியை ருசி பார்க்கும் காட்சியும் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதோடு சுரபி சிக்கன் சாப்பிடும் புகைப்படத்தையும் தனது பேஸ்புக் பக்கத்தின் பதிவு செய்திருந்தார்.

இதற்கு டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வளைதளங்களில் கடும் கண்டங்கள் எழுந்துள்ளது. ஓணம் பண்டிகை அன்று சைவ உணவு கடைபிடிக்கும் நடைமுறை இந்துக்கள் மத்தியில் உள்ளது. அதனால் சுரபி மாட்டு இறைச்சியை சாப்பிடுவது போல் நடித்தது இந்துக்களின் நம்பிக்கையை புண்படுத்தியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுரபியின் டுவிட்டர், பேஸ்புக் பக்கங்களிலும் கண்டனங்கள் குவிந்து கிடந்தன. மேலும், இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தொலைக்காட்சி மதியமம் ஒளிபரப்பு குழுமத்திற்கு சொந்தமானது. இந்த குழுமத்தின் நிர்வாகம் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தது. இதனால் இப்பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

இது குறித்து சுரபி கூறுகையில்,‘‘ ஓணம் பண்டிகையை முன்னிட்டு இந்த நிகழ்ச்சி 2 அல்லது 3 வாரங்களுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டது. அதோடு வடக்கு கேரளா பகுதியை சேர்ந்த மக்களிடம் ஓணம் பண்டிகைக்கு அசைவ உணவு சாப்பிடும் பழக்கம் உள்ளது’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘ அந்த தொலைக்காட்சி சார்பில் என்னிடம் பலமுறை நேர்கானலுக்கு அனுமதி கேட்டு வந்தனர். அதனால் நிகழ்ச்சியை நான் வழக்கமாக செல்லும் ரெஸ்டாரென்டில் பதிவு செய்ய ஓப்புக் கொண்டேன். பசி என்பது வாழ்க்கைக்கு அடிப்படையானது.

எனக்கு பசி எடுக்கும் போது அது மாட்டு இறைச்சியா, கோழிக்கறியா, பன்றிக் கறியா என்பது குறித்து நான் கவலைப்பட மாட்டேன். இங்கு நான் மாட்டு இறைச்சி சாப்பிட்டது பிரச்னை இல்லை. அதை ஓணம் பண்டிகை அன்று ஒளிபரப்பியது தான் பிரச்னையாக உள்ளது’’ என்றார்.