பாலியல் சர்ச்சையில் சிக்கிய நடிகர் சித்திக்-கிற்கு நீதிமன்றம் ஜாமீன் மறுத்ததை அடுத்து தலைமறைவு…

பாலியல் சர்ச்சையில் சிக்கிய நடிகர் சித்திக்-கிற்கு கேரள உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்ததை அடுத்து அவர் தலைமறைவானதாகக் கூறப்படுகிறது.

மலையாள பட உலகில் பாலியல் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் குவிந்து வருகிறது.

நடிகர் சித்திக் மீதான பாலியல் வழக்கில் அவர் ஜாமீன் கோரி மனு வழங்கிய நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்க கேரள உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

இதையடுத்து நடிகர் சித்திக்-கை கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

ஆலுவா-வில் உள்ள அவரது வீடு பூட்டப்பட்டிருக்கும் நிலையில் பதமுகள் எனும் இடத்தில் உள்ள அவரது மற்றோர் வீட்டுக்கு போலீசார் சென்றனர்.

அங்கும் அவர் காணாததை அடுத்து அவரது செல்போன் டவரை வைத்து பார்த்தபோது அவர் பலரிவட்டம் எனும் இடத்தில் இருப்பதாகக் காட்டப்பட்டது.

ஆனால் அங்கும் நடிகர் சித்திக் இல்லாததை அடுத்து அவர் தலைமறைவானதாக சந்தேகிக்கப்படுகிறது.

அதேவேளையில் அவருக்கு ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தை நாட இருப்பதாக நடிகர் சித்திக் தரப்பினர் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் தலைமறைவான நடிகர் சித்திக்கை தேடும் பணியை கேரள போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர்.

[youtube-feed feed=1]