கடந்த வருடம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கடந்த 2020-ம் ஆண்டு இறுதியில் ஓரளவு கட்டுக்குள் வந்தது. இதனால் கொரோனா ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டது.

நிலைமை சரியாகிவிட்டது என நினைக்கும் தருவாயில் கொரோனாவின் இரண்டாம் அலை கோரத்தாண்டவம் மீண்டும் தொடங்கி விட்டது. போன முறையை விட இந்த முறை அதி வேகமாக பரவி வருகிறது கொரோனா.

பலரும் கொரோனாவின் 2-வது அலையில் சிக்கித் தவிக்கும் நிலையில் திரைத்துறை நட்சத்திரங்களும் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மாளவிகா மோகனன் அவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் மாளவிகா மோகனன் மூத்த மருத்துவர் ஜெயந்தி ரங்கராஜன் அவர்களுடன் உரையாடியுள்ளார்.

இந்த வீடியோவில் கோவிட் குறித்து சந்தேகங்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கல் எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகள், வைட்டமின் உணவுகள் ஆகியவை குறித்து டாக்டர் விளக்கம் அளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/p/COcZHJenAFW/