
அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் பெண் மலாலா, ஐநாவின் அமைதிக்கான தூதராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐநா செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் இதனை அறிவித்துள்ளார்.
19 வயதே ஆன இளம் பெண்ணான மலாலா, தலிபான் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளான நிலையிலும், குழந்தைகள் மற்றும் பெண்களின் உரிமைக்காக தொடர்ந்து சமரசமில்லாமல் போராடி வருவதாக மலாலாவுக்கு ஐநா புகழாரம் சூட்டியுள்ளது.
ஆலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸ் உள்ளிட்ட 5 பிரபலங்கள் ஏற்கனவே ஐநாவின் அமைதிக்கான தூதுவர்களாக நியமிக்கபப்பட்டுள்ளனர். தற்போது மலாலா 6வது தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel