தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது தொடர்பாக அர்ஜுன் கபூர் தனது இன்ஸ்டாகிரம பக்கத்தில் பதிவிட்டிருந்தார் .
மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுவிட்டேன். வீட்டுத் தனிமையில் இருக்கப் போகிறேன். உங்கள் அனைவரின் ஆதரவுக்கும் நன்றி என கூறியிருந்தார் .
அவருக்குத் தொற்று உறுதியான சிறிது நேரத்தில், அவருடைய காதலி மலைகா அரோராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது.
தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மலைகா அரோரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்:-
https://www.instagram.com/p/CE0wWvgho51/
“இன்று எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனக்கு எந்த அறிகுறியும் இல்லை. மேலும் என்னுடைய மருத்துவர் மற்றும் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வீட்டிலேயே என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்” என பதிவிட்டுள்ளார் .