திருச்சி

க்கள் நீதி மய்யம் ஒரு திராவிடக் கட்சி என அக்கட்சித் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமலஹாசன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்.  அவர் தனது உரையில் ஆளும் கட்சியை அதிக அளவில் சாடி வருகிறார்.  அவர் திருசி நக்ரில் ஒரு பிரசார கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றி உள்ளார்.  அதன் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார்.

கமலஹாசன்,”நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து வீடுகளுடன் இணைய வசதியுடன் கூடிய கணினி இருக்கும்.  அரசு அதற்கான முதலீட்டை அளிக்கும். இந்த இணைய வசதியால் மக்களுக்கும் அரசுக்கும் எப்போதும் தொடர்பு இருக்கும். மக்கள் நீதி மய்யத்தின் சாதனை நேர்மை ஆகும்.

தொட்டில் முதல் சுடுகாடு வரை தமிழகத்தில் லஞ்சம் தொடர்கிறது. இது போன்ற தமிழக அமைச்சர்களின் ஊழல் படியல் வெகு விரைவில் வெளியிடப்படும். தற்போது நாங்கள் மூன்ராம அணியாக உருவாகி உள்ளோம். அதாவது மூன்றாவது அணி எங்கள் தலைமையில் இயங்கும். ஜனவரியில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்.

ரஜினிகாந்த் உடல் நிலையும், அவர் ஆரோக்கியமும் மிகவும் முக்கியமானதாகும்.  ஆகவே அவரது உடல்நிலை சீரான பிறகு கட்சியைத் தொடங்கும் பணியில் அவர் ஈடுபடுவார்.

தமிழ் மொழி பேசும் அனைவரும் திராவிடர்கள்.  அவ்வகையில் மக்கள் நீதி மய்யம் ஒரு திராவிடக் கட்சிதான்” எனத் தெரிவித்துள்ளார்.