
ஷங்கர் இயக்க்கத்தில் ரஜினிகாந்த் – ஐஸ்வர்யா ராய் நடித்து வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் எந்திரன். இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 என்னும் படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்திலும் ஷங்கர் – ரஜினி இணைந்துள்ளனர். ரஜினியுடன் எமி ஜாக்சன், அக்ஷய் குமார் ஆகியோர் நடிக்க ஏ ஆர் ரகுமான் இசை அமைத்து வருகிறார். இந்த படத்துக்கான மேக்கிங் வீடியோ ஆகஸ்ட் 25ஆன் தேதி வெளியாகி இது வரை 90 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.
தற்போது இந்த படத்தின் 3டி மேக்கிங் விடியோ வெளியாகி உள்ளது. இதை இது வரை 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இந்த வீடியோவில் படம் எப்படி 3டியில் உருவாகி உள்ளது, அதன் தொழில் நுட்ப விவரங்கள், மற்றும் அந்த நேரத்தில் ஏற்பட்ட அனுபவங்கள் ஆகியவைகளை ரஜினி, அக்ஷய்குமார், ஷங்கர், நீரவ் ஷா ஆகியோர் தெரிவிக்கின்றனர். 3.35 நிமிடங்கள் இந்த வீடியோ ஓடுகிறது. நேற்று வெளியான இந்த வீடியோவை யு ட்யூபில் இதுவரை 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்
[youtube https://www.youtube.com/watch?v=NlpDu79wIcM]
[youtube-feed feed=1]