இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சனுக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார், கல்லீரல் பிரச்சினை உள்ளதாக பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதற்கான விசேஷமான அறையில் அவர் இருப்பதாகவும், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

தற்போது அமிதாப் பச்சன் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். இதனைத் தொடர்ந்து தனது tumblr இணையதளத்தில் அனைவரது பிரார்த்தனைக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இதோடு, தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில் அதை வைத்து வந்த செய்திகள் குறித்து தொழில் தர்மத்தை மீறாதீர்கள். ஒருவருக்கு உடலில் இருக்கும் பிரச்சினைகள், மருத்துவச் சிகிச்சைகள் பற்றிய விவரங்கள் எல்லாம் அந்த தனி நபரிடம் மட்டுமே இருக்க வேண்டிய தனிப்பட்ட உரிமை. அந்த விவரங்களை வைத்து பணம் சம்பாதிக்க நினைப்பது சட்டத்துக்குப் புறம்பானது. இந்த உலகில் அனைத்தும் விற்பனைக்கல்ல” என்று அமிதாப் பச்சன் தனது வலைப்பூவில் காட்டமாக பகிர்ந்துள்ளார்.

[youtube-feed feed=1]