‘தி கேரளா ஸ்டோரி’ என்ற படத்தின் மூலம் ஒரு மாநிலத்தின் நற்பெயரை மட்டுமன்றி அங்கு வாழும் பெண்கள் அனைவரையும் இழிவுபடுத்தியுள்ளனர்.
3 பேர் மதமாற்றம் செய்யப்பட்டது 32000 பேர் என்று கற்பனையாக திரித்துக் கூறப்பட்டுள்ளது.
இந்த படத்தை தயாரித்த நபரை பொதுமக்கள் மத்தியில் தூக்கிலிட வேண்டு்ம் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி முக்கிய நிர்வாகி டாக்டர் ஜிதேந்திர அவாத் கூறியுள்ளார்.
தி கேரளா ஸ்டோரி படத்திற்கு உ.பி. அரசு வரிவிலக்கு அறிவித்துள்ள நிலையில் மகாராஷ்டிரா மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத பிரிவினையை தூண்டும் வகையில் அமைந்துள்ள இந்த படத்தை திரையிட மேற்கு வங்க மாநிலம் தடை விதித்துள்ளது.
அதேபோல் தமிழக திரையரங்க உரிமையாளர்களும் இந்தப் படத்தை திரையிட மறுப்பு தெரிவித்துள்ளனர்.