பாதுகாப்புக் கருவிகளை பயன்படுத்துவதும், தனிமைப்படுத்தலும் கொரோனா பரவலை தடுக்கும் மிகச்சிறந்த வழிகளாகும். கிருமி நாசினிகள் அதிக விலையில் விற்கப்படுவதும், முகக் கவசத்திற்கு ஏற்பட்டுள்ள பெரும் தட்டுப்பாடும் COVID-19 பரவலை தடுப்பதில் பெரும் சவாலாக உள்ளது.
இந்நிலையில் வெள்ளித் திரை நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா, சிம்ரன், டாப்சி பன்னு, அதீதி ராய் ஹையாத்ரி, ரைசா வில்சன் உள்ளிட்டவர்கள் முக கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறியுள்ளனர்.
MaskIndia initiative என்ற ஹேஷ்டேக்கில் – mask challenge எடுத்த இவர்கள் முகக் கவசத்தின் அவசியத்தை எடுத்துக்கூறி அதை அணிந்தவாறு உள்ள தனது நிழற்படத்தையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
“முகக் கவசம் அணிவது நம்மைக் காப்பது மட்டுமின்றி நம் குடும்பத்தையும் பாதுகாக்கக் கூடியது” – சிம்ரன்.
“உங்களுக்கான முகக் கவசத்தை நீங்களே செய்து கொள்ளுங்கள். எளிதாக தாவணி அல்லது கைக்குட்டையை பயன்படுத்துங்கள். N95 மற்றும் அறுவை சிகிச்சைக்குரிய முகக் கவசங்களை சுகாதார நிபுணர்களுக்கு விட்டுக்கொடுக்கும் நம் சிறிய செயலால் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம்”- விஜய் தேவரகொண்டா
“தும்மும் போது ஒன்றிரண்டு நொடிகளில் சில மீட்டர் தூரம் வரை வைரஸ் பரவும். எனவே பாதுகாப்பாக இருங்கள். முகக் கவசம் அணியுங்கள்” டாப்ஸி பண்ணு
“ஊரடங்கு உத்தரவையும், சமூக விலகளையும் கடைபிடியுங்கள். சளி, இருமல் இருந்தால் தனிமைப் படுத்திக் கொள்ளுங்கள். முகக் கவசம் அணியுங்கள்”- அதீதிராய் ஹையாதிரி
“வீட்டிலேயே இருங்கள், சுய தூய்மையை மேற்கொள்ளுங்கள், கைகளை அடிக்கடி கழுவுங்கள், அவசியமாக வெளியே செல்வதென்றால் முகக் கவசம் அணியுங்கள். இப்படித்தான் கொரோனா பரவும் சங்கிலியை நம்மால் உடைக்க முடியும்” ரைசா வில்சன்
இவ்வாறு திரை நட்சத்திரங்கள் வெளியிட்டுள்ள விழிப்புணர்வுப் பதிவு சமூக வலை தளங்களில் பலராலும் பாராட்டப்படுகிறது…