டில்லி:
எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்துவிட்டு சபாநாயகர் தனபாலை முதல்வராக்க வேண்டும் என்று பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி திடீரென வலியுறுத்தியுள்ளார்.
சசிகலா, தினகரனை தீவிரமாக ஆதரித்து வருகிறார் சுப்பிரமணியன் சுவாமி. கடந்த சில நாட்களாகவே தினகரனுடன் ஸ்டாலின் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பார் என்று கூறி வருகிறார்.
இந்நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சுப்பிரமணியம் சுவாமி இன்று நேரில் சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ சுப்பிரமணியன் சுவாமி, காங்கிரஸ், இடதுசாரிகளை விட்டு திமுக வெளியே வர வேண்டும். அப்படி நடந்தால் தினகரனுடன் ஸ்டாலின் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடியும்’’ என்றார்.
இதன் பின்னர் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘காங்கிரஸ், இடதுசாரிகள், ஜிகாதிகளுடன் இணைந்து ஸ்டாலின் தவறு செய்துவிட்டார். அதிமுகவின் ஒற்றுமையை பாதுகாக்க ஈபிஎஸ் தியாகம் செய்ய வேண்டும். சபாநாயகர் தனபாலை முதல்வராக்க வேண்டும்’’ என்றும் தெரிவித்துள்ளார்.