திருவனந்தபுரம்: நாளை மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளதால், சபரிமலை அய்யப்பனை தரிசிக்க 60ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்து உள்ளது.
அதன்படி, ஆன்லைனில் 50,000 பேர் முன்பதிவு செய்யலாம் என்றும், ஸ்பாட் புக்கிங்கில் 1000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல கால பூஜை நிறைவடைந்து, மகரவிளக்கு திருவிழா ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து சபரிமலைவாசனை தரிசித்து வருகின்றனர். மகரவிளக்கு பூஜையின் முதல் நாளிலேயே அதிகமான பக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளதால் இனி வரும் நாட்களிலும் சபரிமலை வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது.
பொங்கலன்று (நாளை) சபரிமலையில் மகரவிளக்கு பூஜை நடைபெறுpfwJ/ நாளை பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும், மாலையில் பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடைபெறுகிறது.
இதையொட்டி பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பகிறது. பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக நடைபெறும் பிரசித்தி பெற்ற எருமேலி பேட்டை துள்ளல் கடந்த 11ம் தேதி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மகரவிளக்கு பூஜை தினத்தன்று ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணம் நேற்று பந்தளத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டது. இந்த ஊர்வலம் நாளை மாலை 6.30 மணியளவில் சன்னிதானத்தை அடையும். தொடர்ந்து திருவாபரணம் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். இந்த சமயத்தில் தான் பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தெரியும்.
மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 5 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக இன்றும், நாளையும் பக்தர்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இன்றும் நாளையும் ஆன்லைனில் 50,000, ஸ்பாட் புக்கிங்கில் 1,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜன.15ம் தேதி ஆன்லைன் புக்கிங்கில் 60,000 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜன.16ம் தேதி முதல் வழக்கமான முறையில் புக்கிங் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நாளை காலை 7 மணியிலிருந்து நிலக்கல்லில் இருந்து போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி வரை மட்டுமே பம்பை வரை போக்குவரத்து இயக்கம் இருக்கும்., 12 மணிக்கு மேல் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு பக்தர்கள் அனுமதி இல்லை. வரும் 19ம் தேதி இரவு 10 மணி வரை சபரிமலை கோயில் நடை திறந்திருக்கும். அன்று வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். 20ம் தேதி காலை 7 மணிக்கு சபரிமலை கோயில் நடை சாத்தப்படும்.
அன்றுடன் மண்டல, மகரவிளக்கு காலம் நிறைவடையும்.
முன்னதாக, மகரவிளக்கு திருவிழாவின் போது சாமி ஐயப்பனை தரிசனம் செய்வதற்கான விர்சுவல் க்யூ புக்கிங் ஏற்கனவே நிறைவடைந்து விட்டது. மகரவிளக்கு பூஜையின் போது கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக ஜனவரி 12 முதல் 14ம் தேதி வரை ஸ்பாட் புக்கிங் ரத்து செய்யப்படுவதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்திருந்த நிலையில், தற்போது ஆயிரம் பேருக்கு மட்டுமே ஸ்பாட்டி புக்கிங்கில் டிக்கெட் வழங்கப்படும் என தெரிவித்து உள்ளது.
ஜனவரி 13ம் தேதி 50,000 பேரும், ஜனவரி 14ம் தேதி 50,000 பேருக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
ஜனவரி 15ம் தேதி முதல் வழக்கம் போல் தினசரி 70,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மகரவிளக்கு பூஜையின் போது சாமி ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக சபரிமலை செல்ல நினைப்பவர்கள் இந்த தகவல்களை எல்லாம் கவனத்தில் கொண்டு தங்களின் சபரிமலை பயணத்தை திட்டமிடலாம்.
வயநாட்டில் நடைபெற்ற நிலச்சரிவிற்கு பிறகு மகரவிளக்கு தரிசனத்திற்கான மைதானங்கள் சோதனை செய்யப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளன.
கூட்ட நெரிசலைத் தவிர்க்க, பாதுகாப்பு ஏற்பாடுகளில் கூடுதல் கவனம்.
இன்றும், நாளையும் ஆன்லைலில் புக் செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி. நாளை காலை 7 மணியிலிருந்து நிலக்கல்லில் இருந்து போக்குவரத்து கட்டுப்பாடு விதிப்பு. காலை 10 மணி வரை மட்டுமே பம்பை வரை போக்குவரத்து இயக்கம். 12 மணிக்கு மேல் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு பக்தர்கள் அனுமதி இல்லை.