திருவனந்தபுரம்: மகர விளக்கு பூஜைக்காக  கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் திறக்கப்படுகிறது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை, மற்றும் மகர விளக்கு பூஜைகளில் பல லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என்பதால்,  பக்தர்கள் வசதிகக்கா அங்கு பல்வேறு ஏற்பாடுகளை தேவசம் போர்டு செய்துள்ளது. ஏற்கனவே சபரிமலை அய்யப்பன் கோவில்,  மண்டல பூஜை கடந்த நவம்பர் 16ம் தேதி தொடங்கி டிசம்பர் 26ம் தேதி நிறைவுபெற்றது.  அன்று இரவு நடை சாத்தப்பட்டது. இந்த காலக்கட்மடத்தில் மட்டும், சுமார் 32 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர் என்று  தேவசம் போர்டு அறிவித்திருந்தது.

இந்த நிலையில்,   மகர விளக்கு பூஜைக்காக இன்று மாலை 4 மணிக்கு ஐயப்பன் கோயில் நடை மீண்டும் திறக்கப்படுகிறது. தொடர்ந்து மகர ஜோதி நிகழ்வு ஜனவரி 14ம் தேதி நடைபெறும் நிலையில், 19ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது. மேலும் , மகர விளக்கு பூஜைக்காக ஸ்பாட் புக்கிங் கவுன்டர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்த்தப்படுகிறது.