குருகிராம்

குருகிராமில் ஒரு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த நான்கு தேசியவாத காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீண்டும் மும்பைக்குக் கொண்டு வரப்பட்டனர்.

பாஜக கூட்டணியில் இருந்து விலகிய சிவசேனா கட்சி, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து அரசு அமைக்க முடிவு செய்தது.    இதையொட்டி மூன்று கட்சிகளும் ஆளுநரைச் சந்திக்க இருந்த வேளையில் பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராகவும் தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவி ஏற்றனர்.

இதை எதிர்த்து அந்த மூன்று கட்சிகளும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கில்  மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையில் பாஜக அரசுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் நாளை காலை உத்தரவிட உள்ளதாக தெரிவித்துள்ளது.   எனவே மகாராஷ்டிர சட்டப்பேரவை உறுப்பினர்களிடையே கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களான நரகரி சிர்வால், தவுலத் தரோடா, அனில் பாடில் மற்றும் நிதின் பவார் ஆகியோர் குருகிராம் நகரில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருப்பதாகத் தகவல்கள் வந்தன.    இது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் தீரஜ் சர்மா தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் தீரஜ் சர்மா, “அவர்கள் நால்வரும் குருகிராமில் உள்ள ஒபராய் விடுதியில் இருப்பதாகத் தகவல்கள் வந்தன.  அதையொட்டி நாங்கள் அங்குச் சென்ற போது அவர்கள் நால்வரையும் சரத்பவார் தங்களுக்கு ஆதரவு அளித்துள்ளதாகப் பொய்த் தகவல் தெரிவித்து பாஜகவினர் அங்கு அடைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.  அவர்கள் ஊடகம் மூலம் விவரம் அறிந்து தப்பி வர முயலும் போது நாங்கள் அங்குச் சென்று அவர்களை மீட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.

அவர்கள் நால்வரும் இன்று மதியம் 2 மணிக்கு  விமானம் மூலம் மும்பைக்கு அழைத்து வரப்பட்டு தறபோது மும்பையில் உள்ள ஹியாத் விடுதியில் தங்கி உள்ளனர்.  குருகிராம்நகர  சிவசேனா கட்சித் தலைவர் ரித்து ராஜ்  இந்த மீட்புப் பணியில் தாங்களும்  உதவியதாகவும்  அந்த விடுதியில் குண்டர்கள் மற்றும் காவல்துறையினர் தங்களைத் தடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Thanx : THE HINDU