ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெறும் வரும் கடும் சண்டையில், ராணுவ மேஜர் மற்றும் 3 ராணுவ வீரர்கள் உள்பட 4 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர். மேலும் போலீசார் ஒருவரும் மரணம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ராணுவ தளபதியுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.

சமீப காலமாக ஜம்மு & காஷ்மீரில் தீவிரவாதிகள் நடவடிக்கை அதிகரித்துள்ளது. மேலம் அங்கு பாதுகாப்பு பணியில் உள்ள ராணுவ வீரர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து காரணப்படுகிறது. இதற்கு அந்த பகுதியில் உள்ள மக்களும் துணைபோவதாக கூறப்படுகிறது.
இநத் நிலையில், ஜம்மு & காஷ்மீர் மாநிலம் தோடா பகுதியில், பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில், 4 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தோடா மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையின்போது, பணியில் ஈடுபட்டிருந்த , ராஷ்டிரிய ரைபிள்ஸ் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் சிறப்பு நடவடிக்கை குழுவின் துருப்புக்கள் இரவு 7:45 மணியளவில் தேசா வனப்பகுதியில் உள்ள தாரி கோடே உரார்பாகி என்ற இடத்தில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அதற்கு பாதுகாப்பு படையினர் தரப்பில் பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி தந்தனர்.
சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் பலத்த காயமடைந்த ராணுவ அதிகாரி உட்பட 4 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் காவலர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து, சம்பவம் நடந்த பகுதிக்கு கூடுதல் வீரர்கள் அனுப்பப்பட்டனர். தாக்குதல் நடத்தி தப்பித்த தீவிரவாதிகளை தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய ராணுவத் தளபதி உபேந்திரா திவேதியுடன் பேசினார், அவர் ஜம்மு காஷ்மீரின் தோடாவில் நிலத்தடி நிலைமை மற்றும் நடந்து வரும் நடவடிக்கை குறித்து அவரிடம் தெரிவித்தார் என்று ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
[youtube-feed feed=1]