கான்பூர்:
கான்பூரில் உள்ள இருதயவியல் நிறுவனத்தில் இன்று காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது.


இதையடுத்து ஐ.சி.யுவில் இருந்த நோயாளிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இந்த தீ விபத்தில் எந்தவிதமான உயிரிழப்புகளும் ஏற்படவில்லை. தீக்கான காரணமும் தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும், தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டு நோயாளிகளும் அவர்களது உதவியாளர்களும் படிக்கட்டுகள் வழியாக வெளியேற்றப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து பேசிய கான்பூர் போலீஸ் கமிஷனர் அசீம் அருண், தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவித்தார்.

“இந்த சம்பவத்தை அறிந்து கொண்ட முதலமைச்சர், பிற மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யுமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து விசாரிக்க முதன்மை செயலாளர் (சுகாதாரம்) மற்றும் டி.ஜி. தீயணைப்பு சேவைகள் அடங்கிய உயர்மட்டக் குழுவையும் அவர் அமைத்துள்ளார்.
இந்தக் குழு சம்பவ இடத்தைப் பார்வையிட்டு அதன் அறிக்கையை சமர்ப்பிக்கும். தீயணைப்பு கருவிகளை வலுப்படுத்த மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ வசதிகளையும் முதலமைச்சர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.