ரோம்

கொரோனா வைரஸ் தாக்குதலில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இத்தாலி உள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் சீனாவில் ஹுபெய் மாகாணத்திலுள்ள வுகான் நகரில் கண்டறியப்பட்டது.  அதன் பிறகு 100 உலக நாடுகளில் பரவியது.   தற்போது சீனாவில் சுமார் 90000 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  அத்துடன் 3700 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் இத்தாலி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் இத்தாலியில் 189 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதன் மூலம் இத்தாலியில் கொரோனா வரஸ் பலி 1016 ஆகி உள்ளது.   இது நேற்றை விட 23% அதிகம் ஆகும்.  அத்துடன் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,113 ஆகி 21.7% அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலைக் கொள்ளை நோய் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளதை அடுத்து அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இத்தாலிக்கு விமானச் சேவையை ரத்து செய்துள்ளன.   இத்தாலி நாட்டில் அவசர நிலை அறிவிக்கப்பட்டு சர்வதேச விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.  வடக்கு இத்தாலியில் பாதிப்பு அதிகம் உள்ளன.

இத்தாலியின் வடக்கு பகுதியிலுள்ள பல தோல் மற்றும் ஜவுளித் தொழிற்சாலைகளை பலர் சீனாவுக்கு விற்றுள்ளனர்.  இந்த தொழிற்சாலைகளில் பணி புரிய சீனர்களை இத்தாலி அனுமதித்துள்ளது. இங்கு கொரோனா வைரஸின் தாயகம் என கூறப்ப்டும் வுகான் நகரை சேர்ந்த 1 லட்சம் சீனர்கள் பணி புரிகின்றனர்.

அவர்களுக்காக வுகான்நகரில் இருந்து நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்றன. இவர்கள் மூலமாக கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என்பதால் இதுவே கொரோனா  பரவுதலுக்கு  முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.