வாஷிங்டன்:

கொரோனா வைரல் பரவல் எதிரொலியாக அமெரிக்கர்கள் 26 நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில்  உள்நாடுகளிலும் பொதுமக்கள் மற்ற பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்ப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

சீனாவில் இருந்து பரவி வரும் கொரோனா வைரஸ் , உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியா, அமெரிக்கா, ஈரான், இத்தாலி, தென்கொரியா உள்பட 100க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது கிளைகளை விரித்துள்ள கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்கர்கள் 26 நாடுகளுக்கு பயணம் செய்ய தடை விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், கொரோனா வைரஸ் அமெரிக்காவின் சில பகுதிகளிலும் பரவி வருகிறது… இது மேலும் அதிக அளவில் பரவினால், உள்நாட்டு பயண தடை விதிக்கவும் வாய்ப்பு ஏற்படும் என்று தெரிவித்து உள்ளார். ஆனால், இது தொடர்பாக இதுவரை விவாதிக்கவில்லை என்றும் கூறினார்.

கொரோனா வைரஸ் வெளிநாடுகளில் இருந்து பரவுவதை தடுக்க அனைத்துவிதமான தடுப்பு நடவடிக்கைகளும் எடுத்து வருவதாக கூறியவர்,  யாராவது கொஞ்சம் கட்டுப்பாட்டை மீறிவிட்டால், அதற்கான வாய்ப்புகள் உள்ளது என்றும் தெரிவித்தார்.

டிரம்பின் வெளிநாட்டு பயணத் தடை  உத்தரவு வர்த்தகத்தை பாதிக்க கூடிய மிக மோசமான செயல் என்று லண்டனை சேர்ந்த தொழிலதிபர்களும், பொருளாதார நிபுணர்களும் விமர்சித்துள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, டிரம்பின் உத்தரவையும் மீறி, அமெரிக்கர்கள், தடை செய்யப்பட்ட நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர்,  ‘யாராவது கொஞ்சம் கட்டுப்பாட்டை மீறிவிட்டால்’ அமெரிக்காவுடன் பயண தடை ‘சாத்தியம்’ என்றவர்,  ஏறக்குறைய 80,000 மக்கள் வசிக்கும் மன்ஹாட்டனுக்கு வடக்கே உள்ள நகரத்தை  தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பகுதியாக உள்ளது.

இவ்வாறு டிரம்ப் கூறினார்.