மும்பை :
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் மலிவு விலையில் சிறந்த திறனில் இயங்கக்கூடிய வென்டிலேட்டர்களை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
கொரோனா வைரசால் ஏற்படும் சுவாச கோளாறை சமன் செய்ய உதவும் வென்டிலேட்டர்கள் தேவை அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதும் நிலையில்.
இந்தியாவில், இதன் தேவையை சமாளிக்க குறைந்த உற்பத்தி செலவில், மலிவு விலையில் வென்டிலேட்டர்களை தயாரிக்க மஹிந்திரா நிறுவனம் முயற்சித்து வருகிறது, தற்போதுள்ள அதிநவீன இயந்திரங்கள் பலலட்சம் ரூபாய் இருப்பதால், சில நூறு ரூபாயில் கிடைக்க வழி செய்துள்ளது மஹிந்திரா.
மேலும் இந்த வென்டிலேட்டர்களுக்கான முறையான அனுமதிக்காக காத்திருப்பதாகவும், அனுமதி கிடைத்தவுடன், இது சந்தைக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.
இந்த வென்டிலேட்டரின் செயல்பாடு குறித்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது…