தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மகேஷ் பாபு.
பல்வேறு நல உதவிகளைத் தொடர்ந்து செய்துவரும் மகேஷ் பாபு, ஹீல் எ சைல்ட் என்கிற அறக்கட்டளையுடன் இணைந்து இதுவரை 1000 குழந்தைகளுக்கு மேல் இதய அறுவை சிகிச்சைக்கு உதவியுள்ளார்.
ஆந்திரா மற்றும் தெலங்கானாவில், முறையே புர்ரேபாலெம், சித்தாபுரம் ஆகிய கிராமங்களை மகேஷ் பாபு தத்தெடுத்துள்ளார்.
மகேஷ் பாபு தனது தந்தையும், ஆந்திரத் திரையுலகின் மூத்த நடிகருமான கிருஷ்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு, புர்ரேபாலெம் கிராமத்தினர் அனைவருக்கும் தனது சொந்தச் செலவில் இலவசத் தடுப்பூசி ஏற்பாடு செய்துள்ளார்.
Vaccination is our ray of hope for a normal life again! Doing my bit to ensure everyone in Burripalem is vaccinated and safe. Extremely grateful to #AndhraHospitals for helping us arrange this vaccination drive. pic.twitter.com/n4CXbzrN9X
— Mahesh Babu (@urstrulyMahesh) May 31, 2021